sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழில் முனைவோர்களுக்கான 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ'  தமுக்கத்தில் இன்று நிறைவு

/

தொழில் முனைவோர்களுக்கான 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ'  தமுக்கத்தில் இன்று நிறைவு

தொழில் முனைவோர்களுக்கான 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ'  தமுக்கத்தில் இன்று நிறைவு

தொழில் முனைவோர்களுக்கான 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ'  தமுக்கத்தில் இன்று நிறைவு


ADDED : பிப் 09, 2025 05:18 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் பி.என்.ஐ., பிரம்மாஸ் சார்பில் அனுஜ் டைல்ஸ் வழங்கும் 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ' கண்காட்சி நேற்று துவங்கியது. மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கிவைத்தார். அமைச்சர் மூர்த்தி ஸ்டால்களை பார்வையிட்டார்.

பி.என்.ஐ., பிரம்மாஸ் தலைவர் அறிவழகன், துணைத் தலைவர் மஸ்தான், செயலாளர் ராஜராஜா, மதுரை, சிவகங்கை, விருதுநகர் நிர்வாக இயக்குநர் ராஜரத்தினம் இளங்கோவன், மதுரை, சிவகங்கை மேலாண்மை இயக்குநர் ஹரி பிரசாத், நிர்வாகிகள் குணசேகரன், விவேக், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் கூறுகையில், ''தொழில்முனைவோரை ஒன்றிணைத்து மத்திய, தெற்கு தமிழகத்தின் வணிக வளர்ச்சிக்கு பி.என்.ஐ., பிரம்மாஸ் வித்திட்டு வருகிறது. தங்கள் வணிக முயற்சிகளை தொடங்குவதற்கான தளமாக 55க்கும் மேற்பட்ட பிரான்சைஸர்களை ஒன்றிணைத்து இக்கண்காட்சியை நடத்துகிறோம். பல்துறை நிபுணர்கள் தங்கள் தொழில் சார்ந்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்குகள் நடக்கின்றன'' என்றனர்.

இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது. பிரான்சைஸி எடுக்க, புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம். நபர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம். 78718 00666 என்ற எண்ணிலோ அல்லது www.grandfranchiseexpo.com என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us