/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்
/
தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்
ADDED : அக் 22, 2024 05:18 AM
மதுரை: ''வணிக உலகில் தொழில் முனைவோர் புதிய சவால்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்'' என மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் சி.ஐ.ஐ., சி.இ.எல்., நடத்திய குறுந்தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாமில் மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனர் அன்வர் அலி தெரிவித்தார்.
சி.ஐ.ஐ. மதுரை மண்டல தலைவர் சவுந்தர் கண்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் அஸ்வின்தேசாய் முன்னிலை வகித்தார்.
கமிஷனர் அன்வர் அலி பேசியதாவது:
தொழில்முனைவோர் கல்வி மற்றும் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக வணிக உலகில் தொழில்முனைவோர் புதிய சவால்களை தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும். தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்களின் வளர்ச்சிக்கேற்ப தொழில்நுட்பங்களை தொழில்முனைவோர் எதிர்கொள்கின்றனர்.
கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறை. தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் நம்பமுடியாதது. மேலும் மேலும் தகவல்கள் அறிந்திருப்பது முக்கியமானது என்றார். சி.ஐ.ஐ., மண்டல நிர்வாகி ஸ்ரீகுமரன் ஒருங்கிணைத்தார்.

