/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்
/
மதுரையில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 06, 2025 02:54 AM
மதுரை: மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.
மதுரை கிரீன் அமைப்பு, தானம் அறக்கட்டளை, கல்வித்துறை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழா காந்தி மியூசியத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமையில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் களஞ்சியம் மகளிர், பொதுமக்களுக்கு தரப்பட்டன. பேராசிரியர் ஸ்டீபன், சேவா தொண்டு நிறுவனர் விவேகானந்தன் பேசினர். மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், முன்னாள் ரோட்டரி ஆளுநர் புருஷோத்தமன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் செய்திருந்தார்.
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமை படை, கிரீன் டிரஸ்ட் திருமங்கலம் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் நாராயணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
* பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பாக நாகனாகுளம் வாக்கிங் பூங்காவில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி பங்கேற்றார்.
* வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா முதல்வர் தேன்மொழி தலைமையில் நடந்தது. பேராசிரியர் மாரிசெல்வம் ஏற்பாடு செய்தார்.
* மதுரை வேளாண்கல்லுாரியில் முதல்வர் மகேந்திரன் சுற்றுச்சூழல் தின முக்கியத்துவம் குறித்து பேசினார். கட்டுரை, கோலம், ஓவிய போட்டி நடந்தன. ஏற்பாடுகளை மண், சுற்றுச்சூழல் துறை செய்திருந்தனர்.
* சின்னப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். 'சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நன்னெறி கல்வியும்' தலைப்பில் காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். 'மரம் வளர்ப்போம் பிளாஸ்டிக் தவிர்ப்போம்' தலைப்பில் சமூக ஆர்வலர் சுவாமிநாதன் பேசினார். மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் செய்திருந்தார்.
* மேலுார் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக மூன்றுமாவடி பகுதி எல்.பி.என்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு, மரக்கன்று நடும் விழா நடந்தது. தாளாளர் ஜேக்கப்வின்சிலின் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் இந்திராஜெபமேரிவிஜயா வரவேற்றார். ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் பசுமைப்படை மாணவர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஏற்பாடுகளை ரெட்கிராஸ் செயலாளர் ராஜ்குமார், ஆசிரியர் ஞானசேகரன் செய்திருந்தார்.