ADDED : ஜன 11, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நிலையான வாழ்வியல் முறை குறித்த பயிற்சி முகாம் சேதுபதி பள்ளியில் நடந்தது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் துவக்கிவைத்தார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்றார். உதவி பொறியாளர் உஷாராணி, அலுவலர் முத்துக்குமார், வனச்சரகர் ஆறுமுகம், பள்ளி தலைமையாசிரியர் நாராயணன், சூழல் ஆர்வலர்கள் தருண்குமார், வினோத்குமார், ராமமூர்த்தி பேசினர். பங்கேற்றவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.