/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிற்சாலை, தொழிலாளர்களை பதிவு செய்ய இ.எஸ்.ஐ., அழைப்பு
/
தொழிற்சாலை, தொழிலாளர்களை பதிவு செய்ய இ.எஸ்.ஐ., அழைப்பு
தொழிற்சாலை, தொழிலாளர்களை பதிவு செய்ய இ.எஸ்.ஐ., அழைப்பு
தொழிற்சாலை, தொழிலாளர்களை பதிவு செய்ய இ.எஸ்.ஐ., அழைப்பு
ADDED : ஆக 06, 2025 08:10 AM
மதுரை : மத்திய அரசின் இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்யாத தொழிற்சாலை, தொழிலாளர்களை பதிவு செய்ய சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியரசின் இ.எஸ்.ஐ., சார்பில் 'ஸ்பிரீ-2025' என்ற திட்டம் புதிதாக செயல்படுத்தப்படுகிறது. பதிவு செய்யாத தொழிற்சாலை, நிறுவனங்கள், தகுதியுள்ள பணியாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்ய ஒரு முறை வழங்கும் சிறப்பு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும்.
இத்திட்டம் 1.7.2025 முதல் 31.12.2025 வரை நடைமுறையில் இருக்கும்.
ஒரு நிறுவனத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினால் அந்நிறுவனம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயம். அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து பதிவு செய்யும் வாய்ப்பை ஸ்பிரீ-2025 திட்டம் வழங்குகிறது. இதில் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களையும் பதிவு செய்ய வேண்டும்.இத்திட்டத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு பதிவு செய்த தேதிக்கு முந்தைய காலத்திற்கு எந்தவித ஆய்வு, நிலுவைத்தொகை வசூல், அபராதம் விதிக்கப்படாது.
ஒருமுறை மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இ.எஸ்.ஐ.சி., இணையதளம், ஷ்ராம் சுவிதா போர்ட்டல், எம்.சி.ஏ., போர்ட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் தேதிக்கு பின்னரே அந்நிறுவனத்திற்கு இ.எஸ்.ஐ., சட்டம் பொருந்தும். அதற்கு முந்தைய காலத்திற்கு எந்த தொகையும் செலுத்த தேவையில்லை.
மதுரை கே.கே.நகர் 2வது தெருவில் மண்டல இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இதற்கான சேவை மையம் இயங்குகிறது. அலுவலகத்தை 0452- 253 1074 அல்லது dir-madurai@esic.gov.in அல்லது இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறியலாம் என இணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.