ADDED : செப் 30, 2024 05:00 AM
பெருங்குடி: மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் நன்னெறி ஆசிரியர்கள் முகாம் சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார். அமைப்பாளர் சங்கரநாராயணன், செயலாளர் கண்ணன், ஆன்மிக நன்னெறி வகுப்புகள் மாநில தலைவர் முருகேசன், கன்னியாகுமரி சமய வகுப்பு துணைத் தலைவர் ஜெயக்குமார், திருவிளையாடல் புராண நன்னெறி வகுப்பு பாடத்திட்ட தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் சாந்திதிரவியம், திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் சீனிவாசன் பேசினர்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய தலைவர் சந்திரசேகரன் நிறைவுரை ஆற்றினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினர். துணைச் செயலாளர் ராஜேஷ்குமார், துணை பொருளாளர் திரவியம், அலுவலக துணை செயலாளர் பிரகாஷ் பங்கேற்றனர்.

