/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதிய மழை பெய்தும் நிரம்பாத பேரையூர் கண்மாய் ஐம்பதாண்டுகளாக துார்வாராத அவலம்
/
போதிய மழை பெய்தும் நிரம்பாத பேரையூர் கண்மாய் ஐம்பதாண்டுகளாக துார்வாராத அவலம்
போதிய மழை பெய்தும் நிரம்பாத பேரையூர் கண்மாய் ஐம்பதாண்டுகளாக துார்வாராத அவலம்
போதிய மழை பெய்தும் நிரம்பாத பேரையூர் கண்மாய் ஐம்பதாண்டுகளாக துார்வாராத அவலம்
ADDED : ஜன 29, 2024 05:53 AM

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் கடந்த மாதம் தொடர் மழை பெய்து பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் வழிந்தன. இந்நிலையிலும் பேரையூர் கண்மாய் ஆக்கிரமிப்பால் நிரம்பாமல் உள்ளது.
மழைநீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த கண்மாய்களை முன்னோர்கள் தோற்றுவித்தனர். கிராமங்கள் பயன்பெறும் வகையில் அவற்றை வரத்து வாய்க்கால்களுடன் இணைத்தனர். மனிதனின் சுயநலத்தால் நீராதாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழியத் துவங்கின. பல இடங்களில் குட்டைகள், ஊருணிகள் மறைந்து விட்டன. நீர்வரத்து வாய்க்கால்கள் காணாமல் போயின. இதனால் கண்மாய்கள் வறண்டு விவசாயம் பொய்த்தது.
பேரையூர் இச்சிக்குளம் மற்றும் பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக துார்வராததால் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இக்கண்மாய் நிரம்பி அம்மாபட்டி, பாப்பையாபுரம். சுப்புலாபுரம், செஙகுளம் கண்மாய் வழியாக விருதுநகர் மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இதனால் பல கிராமங்களுக்கு குடிநீர் கிடைத்தது.
தற்போது எந்த பலனுமில்லாமல் கண்மாய் வறண்டிருப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முட்செடிகள் வளர்ந்துள்ளதால், அடிக்கடி விஷ ஜந்துள் வீட்டுக்குள் எட்டி பார்ப்பது வழக்கமாகி விட்டது. ஐம்பது ஆண்டுகளாக துார்வாராமல் இருப்பதால் மேடாகவும் உள்ளது. தண்ணீர் தேங்க வழியின்றி மழைநீர் வீணாகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் செழித்து வளர்ந்த வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் காணாமல் போய்விட்டது. இப்பகுதிகளில் கருவேலம் முட்கள் மண்டிக்கிடக்கின்றன. சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.