/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு கூட உதவித்தொகை கிடைக்கவில்லை குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

ADDED : நவ 13, 2024 05:33 AM
உசிலம்பட்டி : 'உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு கூட உதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் செய்தனர்.
உசிலம்பட்டி தாலுகா அளவிலான தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளாக கிடைத்த நீரால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த முறை கடைமடை கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து மொண்டிக்குண்டு, குளத்துப்பட்டி செல்லும் ரோடு சீர்படுத்தப்படும் என ஓராண்டுக்கும் மேலாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ரோட்டில் உள்ள பள்ளங்களையாவது சரிசெய்ய வேண்டும்.
உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் நுாலகம், வேளாண்மை அலுவலகம் செல்லும் வழியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். உசிலம்பட்டி பழைய தாலுகா அலுவலகம் அருகே உள்ள பள்ளங்களை சீர்படுத்த வேண்டும். காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிக்கிறது. மீன்பிடி தடை போல் குறிப்பிட்ட காலம் ஒதுக்கி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்ற புகாருக்கு அரசிடம் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் உதவித்தொகை வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். கடந்த கூட்டத்தில் செல்லம்பட்டி களஞ்சியம் பெண்கள் குழுவினர் மரக்கன்றுகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ''1,500 மரக்கன்றுகள் ஏற்பாடு செய்துள்ளோம். முறையாக நட்டு பராமரிக்க வேண்டும்'' என்றார்.