ADDED : டிச 27, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மாணவியருக்கு தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார்.
மாணவி ஹரிணிபிரியா வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர்.
பயிற்சியாளர் மகாதேவன் பேசினார். மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.