/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஆக 17, 2025 04:06 AM
மதுரை:ராமநாதபுரம் உப்பூர் திருமுருகன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பரமக்குடி அருகே கலையூரில் ஊருணியை துார்வாரும்போது முதுமக்கள் தாழி, மனித பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு மற்றும் பாம்புவிழுந்தானில் நவீன தொழில்நுட்ப முறையில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் நிபுணர்கள் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி, மத்திய அரசு வழக்கறிஞர் பால்பாண்டி ஆஜராகினர்.
தமிழக அரசு பிளீடர் திலக்குமார், 'அகழாய்விற்குரிய பட்டியலில் கலையூர் மற்றும் பாம்புவிழுந்தான் இடம்பெற்றுள்ளன' எனக்கூறி ஆவணங்கள் சமர்ப்பித்தார்.
நீதிபதிகள்,'இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.