நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் மாநில மைய மத்திய செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில தலைவர் தமயந்தி, பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் பணி அமர்வு, பதவி உயர்வு விதிகளை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும், 2001ல் பணியில் சேர்ந்தவர்களை அந்த நாள் முதல் பணி வரன்முறை செய்யவேண்டும், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி நியமனம் வழங்க வேண்டும், ஆய்வக நுட்பனர்களுக்கு வெள்ளை கோட் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.