நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் அப்துல்ரகுமான் நிதி நிலை அறிக்கை, செயல் தலைவர் மணி சங்கத்திற்கு அலுவலகம் குறித்து பேசினர்.
ஓய்வூதியர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றகோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க வளர்ச்சி குறித்து கவுரவ தலைவர்கள் துரைபாண்டியன், வீரணன், துணைத் தலைவர் சிதம்பரம், ஆலோசகர்கள் பாண்டி, வீரணன் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.