ADDED : செப் 02, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழுக் கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் முத்துமணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முனியப்பன் வரவேற்றார். நிறுவனர் கர்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சோழவந்தான் தொகுதியின் திட்ட செயல்பாடுகள், குறைகள், கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் அக்பர்அலி, உறுப்பினர்கள் ராஜாங்கம், பிரபாகர், சுமதி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
