குன்றத்தில் 2 இடங்களில் அலைபேசி பாதுகாப்பு பெட்டகம்
குன்றத்தில் 2 இடங்களில் அலைபேசி பாதுகாப்பு பெட்டகம்
ADDED : செப் 02, 2026 04:01 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயில் முன்புறமுள்ள பொருட்கள் பாதுகாப்பு அறை, சொக்கநாதர் கோயில் முன்பு அலைபேசி பாதுகாக்க பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 12 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சொக்கநாதர் கோயில் முன்பு 200 அலைபேசிகள் வைப்பதற்கும், கோயில் முன்பு 350 அலைபேசிகள் வைப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அலைபேசி பாதுகாப்பு பெட்டக நிலையம் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். மதியம் இடைவெளி இன்றி தொடர்ந்து செயல்படும். இரவில் பாதுகாப்பு பெட்டகத்தில் அலைபேசியை வைத்துவிட்டு, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் அலைபேசியை பெற்ற பின்புதான் பாதுகாப்பு பெட்டக நிலையம் மூடப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
