/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுஞ்சாலைத்துறையில் அமல்படுத்த அக்கறையின்றி தாமதமாகும் அரசாணை நிர்வாக பதவியில் ஐ.ஏ.எஸ்.,சை நியமிக்க எதிர்பார்ப்பு
/
நெடுஞ்சாலைத்துறையில் அமல்படுத்த அக்கறையின்றி தாமதமாகும் அரசாணை நிர்வாக பதவியில் ஐ.ஏ.எஸ்.,சை நியமிக்க எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலைத்துறையில் அமல்படுத்த அக்கறையின்றி தாமதமாகும் அரசாணை நிர்வாக பதவியில் ஐ.ஏ.எஸ்.,சை நியமிக்க எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலைத்துறையில் அமல்படுத்த அக்கறையின்றி தாமதமாகும் அரசாணை நிர்வாக பதவியில் ஐ.ஏ.எஸ்.,சை நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 30, 2025 12:37 AM
மதுரை : தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிக்கு சாலை ஆய்வாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்த அரசாணையில் பதவி உயர்வுக்கு பதில் பணபலன் அளிக்கும் உத்தரவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் அரசுக்கு பரிந்துரைத்து அதனடிப்படையில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் 15 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதனை அமல்படுத்த வலியுறுத்தி சாலை ஆய்வாளர்கள் போராடி வருகின்றனர். மே 27 ல் சென்னையில் முறையீடு செய்ய திரண்டனர்.
அந்நிலையில் போலீசார் முன்னிலையில் முதன்மை இயக்குனர் செல்வதுரை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு மாதத்திற்குள் பரிந்துரையை அரசுக்கு அனுப்புவதாக உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2 மாதங்களை கடந்து விட்டதால் வழக்கம்போல அந்த அரசாணை அமலுக்கு வராது என்று சாலை ஆய்வாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நகராட்சித்துறை, மாநகராட்சி நிர்வாகங்களின் தலைமைப்பொறுப்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளதால் அரசாணைகள் உடனுக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையில் மட்டும் முதன்மை இயக்குனராக பொறியாளரையே நியமிக் கின்றனர்.
செயலர் அந்தஸ்தில் தான் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
தொழில்நுட்ப திறனுள்ள முதன்மை இயக்குனர்களால், நிர்வாகப்பணியை செம்மையாக நடத்த இயலவில்லை. இதனால் அரசாணைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் செய்கின்றனர் என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை தொழிற்கல்வி சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சரவணகுமார், சுரேஷ், செல்வராஜன், திருமுருகன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 45 கோட்ட பொறியாளர்கள் முதல் தலைமை பொறியாளர் வரை பரிந்துரைத்து, 2010ல் வெளியான அரசாணையை இன்று வரை அமல்படுத்தாமல் வைத்துள்ளனர்.
மற்ற துறைகளில் எங்களைப்போன்ற தகுதி பெற்றவர்களெல்லாம் பணபலனை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் நெடுஞ்சாலைத்துறையில் அரசாணையை நடைமுறைப்படுத்தாததால் கஷ்டப்படுகிறோம். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.