நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தானம் அறக்கட்டளையின் மேலுார் மருதம் களஞ்சிய வட்டாரம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் 177 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதில் 33 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டது. கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா, திட்ட நிர்வாகி பாஸ்கரன் ஏற்பாடுகளை செய்தனர்.