UPDATED : நவ 26, 2026 06:54 PM
ADDED : நவ 26, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
புதுார்: மதுரை புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பாதுகாப்பு, மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழ.பாண்டியன், செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் பீமாராவ் வரவேற்றார். மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பாண்டியன், திராவிட பெரியார் கழகம் தலைவர் மணியமுதன், வி.சி.க., நிர்வாகி தமிழ் நிலவன், மக்கள் தமிழக கட்சி தலைவர் நிலவழகன் உள்பட பலர் பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார்.
