UPDATED : நவ 26, 2026 06:54 PM
ADDED : நவ 26, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பெருங்காம நல்லுார், தாடையம்பட்டி, எழுமலை, கே.பெருமாள்பட்டி, மேக்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் பால்ராஜ், ஊரகவளர்ச்சித் துறைத் தலைவர் செந்தல்குமார், தமிழ்த் துறை பேராசிரியர் பிரேமலதா, அரசியல் அறிவியல் துறை பால்பாண்டி, பொருளியல்துறை அல்போன்ஸா, இயற்கை வள பாதுகாப்பு குழுவினர், மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் வாய்ப்புகள், வேலை வாய்ப்பு குறித்து விளக்கினர்.
