ADDED : டிச 12, 2025 06:39 AM
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (இ.பி.சி.,) சார்பில் நாளை (டிச.13) ஏற்றுமதி மாநாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து சங்கத் தலைவர் ஜெகதீசன், இ.பி.சி., சேர்மன் ராஜமூர்த்தி கூறியதாவது:
பிரிட்டனின் இந்தியப் பிரதிநிதி வெங்கடாச்சலம், மியான்மர் பிரதிநிதி ரங்கநாதன், எஸ்.இ.பி.சி., டில்லி மண்டல இயக்குநர் விவேக் பக்ஸி, அபேடா மண்டலத் தலைவர் ஷோபனாகுமார், எக்ஸிம் வங்கி துணைப்பொதுமேலாளர் சுகந்தி ஆறுமுகம் என ஏற்றுமதி தொடர்பான பல்வேறு துறையினர் மாநாட்டில் பேசுகின்றனர்.
ஏற்றுமதித் துறையில் சாதனை படைத்த 5 நாடுகளின் ஏற்றுமதியாளர் பங்கேற்கும் கலந்துரையாடல் நடக்கிறது.
சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஏற்றுமதித்துறையில் நுழைய விரும்புவோருக்கு இம்மாநாடு உதவும் என்றனர். சங்க செயலாளர் ஸ்ரீதர், மைய துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகி காவேரி உடனிருந்தனர்.

