/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி இன்று துவக்கம்
/
ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி இன்று துவக்கம்
ADDED : பிப் 10, 2024 05:14 AM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப விரிவாக்க மையத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பயிற்சி முகாம் இன்றும் (பிப்.10), நாளையும் (பிப்.11) காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இதில் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகள், எந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை எப்படி தெரிந்து கொள்வது, பாதுகாப்பு வழிமுறைகள், இன்சூரன்ஸ், கப்பலில் அனுப்புவதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம், வங்கிக் கடனுதவி குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசு சான்று உண்டு.
கட்டணம் ஒருவருக்கு ரூ.3540. பங்கேற்க விரும்புவோர் 86956 46417 அல்லது 0452- 2568 313ல் பெயரை பதிவு செய்யலாம் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.