sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ஏப்.27ல் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் கருத்தரங்கம்

/

மதுரையில் ஏப்.27ல் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் கருத்தரங்கம்

மதுரையில் ஏப்.27ல் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் கருத்தரங்கம்

மதுரையில் ஏப்.27ல் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் கருத்தரங்கம்


ADDED : ஏப் 13, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தவறில்லாமல் ஏற்றுமதி செய்வதற்கும், ஸ்டார்ட் - அப் தொடங்கி நிதி பெறுவதற்கும் வழிகாட்டும் கருத்தரங்கத்தை மதுரையில் ஏப்.,27ல் வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்.

தினமலர் நாளிதழில் கட்டுரைகள் எழுதிவரும் வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் கூறியதாவது:

ஏப்.,27 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில் இந்த கருத்தரங்கம் நடக்கிறது.

ஏற்றுமதி தொழிலின் புதிய நடைமுறைகளை தெளிவாக தெரிந்து கொண்டால், தவறில்லாமல் ஏற்றுமதி செய்யலாம். கல்லுாரி மாணவர்கள் பலருக்கும் வேலைக்கு செல்வதை விட, ஸ்டார்ட்-அப் தொடங்குவதில் ஆர்வம் உள்ளது. 'ஸ்டார்ட் அப்' தொடங்க நிறைய விதிமுறைகள் உள்ளன. அவற்றை எளிமையாக கற்றுக்கொள்ளவும், ஏற்றுமதி குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளவும் நிகழ்ச்சி உதவும்.

ஸ்டார்ட்-அப் நிதி திரட்டுவது பற்றியும், ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது குறித்தும் இந்த கருத்தரங்கில் விடை கிடைக்கும். நிகழ்ச்சியின் இடையே, பங்கேற்பவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்படும். தொழில்முனைவோர், கல்லுாரி மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி இது.

400 ஸ்டார்ட் அப் தொழில்கள் அடங்கிய ரூ.1200 மதிப்புள்ள 4 புத்தகங்கள், ஏற்றுமதி சம்பந்தப்பட்ட ரூ.1500 மதிப்புள்ள 4 புத்தகங்கள் வழங்கப்படும். இது தவிர ரூ.500 மதிப்புள்ள இ- புத்தகங்கள் வழங்கப்படும். மதிய உணவு தரப்படும்.

முன்பதிவு விபரங்களுக்கு 98197 50966, 99940 29969 என்ற எண்களில் பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை டைட்டில் ஸ்பான்ஸராக கோவையைச் சேர்ந்த அதிபன் குழுமத்தின் 99பேங்க்ஸ்.இன் நிறுவனமும், கோல்டன் ஸ்பான்ஸர்களாக திருவாரூர் ஸ்ரீ நாராயணி நிதி, சிட்டி யூனியன் வங்கி, சக்தி மசாலா, மெம்பில் நிறுவனமும் இருக்கின்றன.தினமலர் நாளிதழ் ஊடக ஸ்பான்சராக உள்ளது. தியாகராஜர் கல்லுாரி, ரத்னா ரெசிடென்சியும் நிகழ்ச்சிக்கு உதவி புரிகின்றன. தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா நிகழ்ச்சியை நடத்துகிறது.






      Dinamalar
      Follow us