/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஏற்றுமதி, ஸ்டார்ட் அப் கருத்தரங்கு
/
மதுரையில் ஏற்றுமதி, ஸ்டார்ட் அப் கருத்தரங்கு
ADDED : ஏப் 28, 2025 06:17 AM

மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பிரபல வங்கியாளர், ஏற்றுமதி பயிற்சியாளர் சேதுராமன் சாத்தப்பன் நடத்திய, தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட் அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவது தொடர்பான வழிகாட்டும் கருத்தரங்கு நேற்று நடந்தது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ், ஸ்ரீநாராயணி நிதி நிறுவன மூத்த ஆலோசகர் ஸ்ரீதரன், கல்லுாரி இயக்குநர் சுகுமாறன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
ஏற்றுமதி, ஸ்டார்ட் அப் தொடர்பாக சேதுராமன் சாத்தப்பன் எழுதிய 3 புத்தகங்களை ஜெபநாத் ஜூலியஸ் வெளியிட்டார். ஸ்ரீதரன், சுகுமாறன் பெற்றுக்கொண்டனர்.
சேதுராமன் சாத்தப்பன் பேசுகையில், உலக அளவில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் துவங்குவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இளைஞர்களிடையே ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆரம்பிக்கும் எண்ணமும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஏற்றுமதி தொழிலின் புதிய நடைமுறைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தால் தவறில்லாமல் ஏற்றுமதி செய்யலாம். ஸ்டார்ட் அப் தொடங்குவது குறித்த விதிமுறைகளையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்றார்.
கருத்தரங்கில், 400 ஸ்டார்ட் அப் தொழில்கள் அடங்கிய ரூ.1200 மதிப்புள்ள 4 புத்தகங்கள், ஏற்றுமதி சம்பந்தப்பட்ட ரூ.1500 மதிப்புள்ள 4 புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் ரூ.500 மதிப்புள்ள 'ஈ-'புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ப்ளாட்டினம் டைட்டில் பார்ட்னராகவும், கோவையைச் சேர்ந்த அதிபன் குழுமத்தின் 99banks.in நிறுவனம் டைமண்ட் ஸ்பான்ஸராகவும் இருந்தன. கோல்டன் ஸ்பான்ஸர்களாக திருவாரூர் நாராயணி நிதி, சிட்டி யூனியன் வங்கி, சக்தி மசாலா, மெம்பில் நிறுவனம் இருந்தன.தினமலர் ஊடக ஸ்பான்சராக இருந்தது. தியாகராஜர் கல்லுாரி, ரத்னா ரெசிடென்சி, வீ ஸ்டார்ட் டைமண்ட்ஸ் நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தன. தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா இந்நிகழ்ச்சியை நடத்தியது.

