/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பிப்.3ல் ஏற்றுமதி உச்சி மாநாடு
/
மதுரையில் பிப்.3ல் ஏற்றுமதி உச்சி மாநாடு
ADDED : பிப் 01, 2024 05:15 AM
மதுரை : மதுரை உலக தமிழ்ச் சங்க அரங்கில் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (இ.பி.சி.,) சார்பில் 'ஏற்றுமதி உச்சி மாநாடு 2024' பிப்., 3ல் நடக்கிறது.
தலைவர் திருப்பதிராஜன் கூறியதாவது: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 2010ல் துவங்கிய இம்மையம் சார்பில் ஏற்றுமதிக்கான தொடர் பயிற்சி வகுப்பு நடத்தி பல ஏற்றுமதியாளர்களை உருவாக்கி வருகிறோம். இதுதொடர்பாக இந்தாண்டு மதுரையில் பிப்.3ல் நடக்கும் இந்த உச்சி மாநாடு காலை 9:00 மணி முதல் மாலை 6:00 வரை நடக்கிறது.
சிறப்பு அம்சமாக ஏற்றுமதி பரிணாமங்கள், பிற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்யாமலே அடுத்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் யுத்திகள், சிறு குறு உற்பத்தியாளர்களும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுத்திக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படும்.
முன்னணி ஏற்றுமதி இறக்குமதியாளர்களின் கலந்துரையாடல், அயல்நாட்டு துாதரக அதிகாரிகளுடன் நேர்காணல், முதன்முறை ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், 'எஸ்' தலைவர் நீதிமோகன், இ.பி.சி., துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், ராஜமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்கள் சரவண பிரபு, நோபல் ஜான், நட்ராஜ், மோகன்குமார் காவேரிக்கனி குழுவினராக செயல்படுகின்றனர். இதில் பங்கேற்க 75388 49222 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம் என்றார்.