/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய வாய்ப்பு நீட்டிப்பு
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய வாய்ப்பு நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய வாய்ப்பு நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய வாய்ப்பு நீட்டிப்பு
ADDED : மார் 16, 2024 07:29 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். இதற்கு கட்டணம் இல்லை. 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகள் வரை காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்யலாம். இதற்கான காலநீட்டிப்பு 2019 உடன் முடிந்தது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருக்கும் அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் உரிய ஆவணங்களுடன் (பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல்கள்) ரூ.200 காலதாமத கட்டணம் செலுத்தி மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறலாம். இந்த வாய்ப்பு டிச.,31 வரை மட்டுமே. இனிமேல் இதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

