/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
/
விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
ADDED : மே 10, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் போரிட்டு வருகிறது.
இதனால் எல்லைப் பகுதியிலுள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் விமான நிலைய நுழைவு வாயிலையே நிறுத்தப்பட்டு போலீசார் தீவிர சோதனைக்கு பின்பு அனுமதிக்கின்றனர்.
கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.