நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,அரவிந்த் கண் வங்கி சார்பில் 40 வது தேசிய கண்தான இரு வார விழா மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது.
இறந்தபின் கண்தானம் அளித்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அகல்விளக்கு ஏற்றப்பட்டது. கண்தான விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து கண் போன்ற அமைப்பினை ஏற்படுத்தினர். மாநகராட்சி கமிஷனர் சித்ரா தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜனா கண்ணின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இயக்குநர்கள் கிம், ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., ராமநாதன், கண் வங்கி மேலாளர் சரவணன் செய்திருந்தனர்.