நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சமுதாய தொண்டு நிறுவனங்களுக்கான பாராட்டு விழா நடந்தது. கண் மருத்துவ முதன்மை டாக்டர் கிம் வரவேற்றார். தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கலெக்டர் பிரவீன்குமார் பாராட்டினார்.
250 நிறுவனங்களைச் சேர்ந்த 490 பேர் கலந்து கொண்டனர். முகாம் செயல்பாடு குறித்து மேலாளர் மீனாட்சிசுந்தரம் பேசினார். மருத்துவமனை சேர்மன் டாக்டர் ரவீந்திரன் மருத்துவமனையின் நோக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம் பங்கேற்றார். டாக்டர் லலிதா நன்றி கூறினார்.