ADDED : ஜன 15, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசியசாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், உசிலம்பட்டி வாகன ஆய்வாளர் சுகந்தி துவக்கி வைத்தனர்.
நிலக்கோட்டை தமியான் கண்மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். டிரைவர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்ததனர்.
