/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போலி 'உத்யம்' சான்றிதழ் குழப்பத்தில் புதிய தொழில் முனைவோர்கள்
/
மதுரையில் போலி 'உத்யம்' சான்றிதழ் குழப்பத்தில் புதிய தொழில் முனைவோர்கள்
மதுரையில் போலி 'உத்யம்' சான்றிதழ் குழப்பத்தில் புதிய தொழில் முனைவோர்கள்
மதுரையில் போலி 'உத்யம்' சான்றிதழ் குழப்பத்தில் புதிய தொழில் முனைவோர்கள்
ADDED : மார் 05, 2024 05:06 AM
மதுரை : மத்திய அரசின் 'உத்யம்' சான்றிதழுக்கு முதன் முதலாக விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர் தங்கள் பெயரில் ஏற்கனவே பதிந்துள்ளதாக இணையதள 'போர்ட்டலில்' காட்டப்படுவதால் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
தொழில் முனைவோர் உற்பத்தியாளர் சேவைத்தொழில் செய்வோர் மற்றும் வணிகத்தில் ஈடுபடுவோர் அனைவரும் மத்திய அரசின் உத்யம் சான்றிதழ் பெற தகுதியானவர்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இச்சான்றிதழ் இருந்தால் வங்கி கடன் பெறுவது சுலபம். பதிவு செய்வதற்கு ஆதார், பான் கார்டு அவசியம். புதிதாக தொழில் துவங்குவோர் விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே தங்கள் பெயர், முகவரியில் உத்யம் சான்றிதழ் உள்ளதாக காண்பிக்கப்படுவதால் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரி கூறியதாவது:
ஆதார் முகவரியை வைத்து யார் வேண்டுமானாலும் இணையத்தின் மூலம் எளிதாக சான்றிதழ் பெறலாம். தொழில் முனைவோருக்கான எளிய வழியாக இதை மத்திய அரசு அறிமுகப்படுத்தினாலும் சிலர் இதை தவறாக பயன்படுத்துகின்றனர்.
வாகன கடன்கள் தனியார் நிறுவனங்களிடம் வாங்கும் போது ஆதார் எண், பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். இதைக் கொண்டு சிலர் தவறாக போலி சான்றிதழ் பதிவு செய்துள்ளனர். அலைபேசி எண் மட்டும் வேறாக உள்ளது.
அதுவும் போலி எண்கள். சில நேரங்களில் பேசும்போது பதில் அளிக்க மறுக்கின்றனர். போலியான உத்யம் சான்றிதழை ரத்து செய்துவிட்டு மீண்டும் அவர்களது பெயரில் புதிய சான்றிதழ் எடுப்பதற்கு 3 வாரமாகும்.
போலி சான்றிதழை ரத்து செய்ய டில்லி வரை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் உண்மையான தொழில் செய்வோர் உடனடியாக தொழில் தொடங்க முடியாமல் தாமதத்திற்கு ஆளாகின்றனர் என்றார்.

