/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆறாண்டுகளாக மடை கட்ட மறுக்குது நீர்வளத்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
/
ஆறாண்டுகளாக மடை கட்ட மறுக்குது நீர்வளத்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
ஆறாண்டுகளாக மடை கட்ட மறுக்குது நீர்வளத்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
ஆறாண்டுகளாக மடை கட்ட மறுக்குது நீர்வளத்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 14, 2025 02:31 AM

மேலுார்: மேலவளவில் வேப்பனேரி கண்மாய் மடையை புதிதாக கட்டித் தர கோரி விவசாயிகள் வலியுறுத்தியும், கட்டித் தராமல் காலம் கடத்துவதாக நீர்வளத் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
மேலவளவில் 60 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வேப்பனேரி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் புலிப்பட்டி பிரதான கால்வாய் 1 வது மடை வழியாக வரும் தண்ணீரால் நிரம்பும். அதன் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். கண்மாயில் இருந்து மூன்று மடைகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறுவதில் நடுமடையில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயி சிதம்பரம் கூறியதாவது: மடை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் ஆறு வருடங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. அதனால் தண்ணீர் வீணாகி கண்மாய் வறண்டதால் மனிதர்கள், கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மடையை புதிதாக கட்டித் தருமாறு ஆறு ஆண்டுகளாக மனுக் கொடுத்தும் நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டித் தரவில்லை.
தண்ணீரை சேமிக்க வேண்டியவர்களே வீணாக்குவது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. மழைக்காலம் நெருங்குவதற்குள் நீர்வளத்துறையினர் மடையை விரைந்து கட்டித்தர வேண்டும் என்றார்.
நீர்வளத் துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், உடனே மடை சரி செய்யப்படும் என்றார்.