/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
/
விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : செப் 28, 2025 02:49 AM
பேரையூர்: மக்காச்சோளம், பருத்தி விவசாயிகள் செப். 30க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
டி.கல்லுப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் விமலா கூறியதாவது: இயற்கை சீற்றம் வேறு காரணங்களால் சாகுபடி பாதிக்கப்பட்டால் பயிர் காப்பீடு செய்தோருக்கு நிவாரணம் கிடைக்கும். நடப்பாண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காரீப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.646. பருத்தி பயிருக்கு ரூ. 214, பாசிப் பயறுக்கு ரூ.340 பிரிமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். பிரிமியம் செலுத்த கடைசி நாள் செப்.30. சாகுபடி செய்த பயிர்களின் அடங்கல், வங்கிப் புத்தகம், ஆதார் அட்டை, பட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்றார்.