/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்
/
உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 03, 2025 01:30 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் வட்டார பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் மெர்சி ஜெயராணி தலைமை வகித்தார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கராஜ், அனுமதி பாண்டியன், தேன்மொழி முன்னிலை வகித்தனர். நிர்வாக தலைவர் தனிராஜன் வரவேற்றார்.
வேளாண் விளை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விலை கிடைக்கவும், டிராக்டர், உழவு, அறுவடை, மக்காச்சோளம் உதிர்க்கும் இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்க கம்பெனி நிர்வாகம் மற்றும் வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
விவசாய செலவினங்களுக்கு கடன் உதவிகளை தேசிய, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சாத்தையாறு அணையை துார்வாரி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வேளாண் துறை அதிகாரிகள் சித்தார்த், மீனா, ராஜ்குமார் பங்கேற்றனர்.
முதன்மை செயல் அலுவலர் ராஜபாண்டி நன்றி கூறினார்.