sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகள் 'லக லக''; குறைதீர் கூட்டத்தில் கூச்சல், கோபம், வார்த்தை மோதல் ; கமிஷன் வாங்குவது தெரியாதா என அதிகாரிகளிடம் கேள்வி

/

விவசாயிகள் 'லக லக''; குறைதீர் கூட்டத்தில் கூச்சல், கோபம், வார்த்தை மோதல் ; கமிஷன் வாங்குவது தெரியாதா என அதிகாரிகளிடம் கேள்வி

விவசாயிகள் 'லக லக''; குறைதீர் கூட்டத்தில் கூச்சல், கோபம், வார்த்தை மோதல் ; கமிஷன் வாங்குவது தெரியாதா என அதிகாரிகளிடம் கேள்வி

விவசாயிகள் 'லக லக''; குறைதீர் கூட்டத்தில் கூச்சல், கோபம், வார்த்தை மோதல் ; கமிஷன் வாங்குவது தெரியாதா என அதிகாரிகளிடம் கேள்வி


ADDED : ஏப் 26, 2025 04:20 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் துவக்கம் முதல் இறுதி வரை கூச்சல், குழப்பம், கோபம், வார்த்தை மோதல் என விவசாயிகள் நடந்து கொண்டதால் கூட்டம் மதியம் 2:00 மணியைத் தாண்டியும் நீடித்தது.

கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகன், கூட்டுறவு இணைப்பதிவாளர் சதீஷ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் சாந்தி பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதுமே விவசாயிகள் நெல் கொள்முதல் மையத்தில் கமிஷன் வாங்கும் பிரச்னையை ஆரம்பித்தனர். புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவிக்கவும், 'தமிழ்நாடு முழுவதும் கமிஷன் வாங்குவது தெரிகிறது. இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாதா' என விவசாயிகள் கூச்சலிட்டனர். அதிகாரிகளுக்கு ஆதரவாக எழுந்த சில விவசாயிகள் 'இது குறைதீர் கூட்டம் தான். யாரையும் குற்றவாளியாக்கும் கூட்டம் இல்லை. மற்ற கலெக்டர்கள் இப்படி பேச அனுமதித்ததில்லை' என்று பதிலுக்கு கூச்சலிட்டனர். மூடைக்கு ரூ.23 வீதம் 83 மூடைகளுக்கு கமிஷன் கொடுத்த தோடனேரி விவசாயி, 'எந்த கொள்முதல் மையத்திலும் விவசாயிகளிடம் கமிஷன் வாங்குவதில்லை என்று நாங்களே 50 விவசாயிகள் சேர்ந்து எழுதித் தருகிறோம், வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஆவேசமாக பேசினார்.

திசை மாறிய தென்னை


தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தோட்டக்கலைத்துறை கண்டு கொள்ளவில்லை என்று புகார் தெரிவித்தனர். மதுரையில் மூன்று இடங்களில் விவசாயிகளுக்கான முகாம் அமைத்து பாதிப்பு குறித்து விளக்கியுள்ளதாக தோட்டக்கலைத்துறையில் தெரிவிக்கப்பட்டது. மரம் பட்டு போவதால் ஏக்கர் கணக்கில் மரங்களை அழித்து வருகிறோம். தோட்டக்கலைத் துறை, வேளாண் பல்கலை தரும் ஆலோசனைகளால் மரங்களை காப்பாற்ற முடியவில்லை. சரியான மருந்தை பல்கலை கண்டுபிடித்து 'ட்ரோன்' மூலம் தெளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மரத்திற்கு ரூ.10ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். வட்டாரம்தோறும் பாதிப்புக்குள்ளான மரங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.

கொட்டாம்பட்டி பெரியருவி நீர்த்தேக்கத்திற்குட்பட்ட 26 குளங்களுக்கு கால்வாய் இல்லை. 61 ஆண்டாக கேட்கிறோம் என்று விவசாயி தெரிவிக்க, '2 கால்வாய்கள் தான் துார்ந்துள்ளது. விரைவில் சரிசெய்வோம்' என நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் நிறைய தவறுகள் நடக்கின்றன. செயலாளர்களை மாற்ற வேண்டும் என விவசாயி தெரிவித்த போது, 'செயலாளர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளனர். உதவி செயலாளர்கள் பணியிட மாற்ற பட்டியல் தயாராக உள்ளது' என இணைப்பதிவாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

இனி 'டிஜிட்டல் கிராப் சர்வே'


கலெக்டர் சங்கீதா பேசியதாவது: பட்டா நிலங்களில் கருவேல மரங்கள் இருந்தால் அவற்றை அகற்றி ஏலத்தில் விட்டு பட்டா உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம். கண்மாய்களில் துார்வாருவது குறித்து நிறைய மனுக்கள் வருகின்றன. நீர்வளத்துறை, பஞ்சாயத்து யூனியன் கண்மாய், குளங்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளை அனுமதிக்கலாம். எந்தெந்த கண்மாய் துார்ந்துள்ளது என்கிற விவரங்களை இரு துறையும் பட்டியலிட்டு அனுப்புங்கள். இனி வரும் காலத்தில் வயல் போட்டோ எடுத்தால் சர்வே குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவாகி விடும் என்பதால் 'டிஜிட்டல் கிராப் சர்வே' தான் செயல்படுத்தப்படும். முத்துப்பட்டி கண்மாய் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் நீர்வளத்துறை அந்த வாய்க்காலை மூடவேண்டும். திருவாலவாய நல்லுார் கண்மாய் மறுகால் ஓடை கழிவுநீர் கலப்பதை தடுக்க, வேறிடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். நீர்வரத்து வாய்க்கால், கண்மாய் கரைகளில் விவசாய ஆக்கிரமிப்பு இருந்தால் நீர்வளத்துறையினர் நேரடியாக புல்டோசர் மூலம் அகற்றலாம். கட்டடங்கள் இருந்தால் தான் படிவம் 1 வழங்க வேண்டும். உசிலம்பட்டி 58 கிராம கால்வாயின் கிளை கால்வாயை ஆக்கிரமித்துள்ள கம்பிவலை, முள்வேலிகளை உடனடியாக நீர்வளத்துறை அகற்ற வேண்டும் என்றார்.

அளவோடு பேசுங்க...

மேலுார் வேப்படப்பு கிராம சர்வே எண்ணை சர்வேயர் தவறாக அளவிட்டு கல் ஊன்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கூற 'தவறு என நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள். பொதுவாக எல்லோரையும் விவசாயிகள் குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது. உங்கள் பேச்சும் சொல்லும் விதமும் சரியில்லை. அளவோடு பேசுங்க' என்று கலெக்டர் கடிந்து கொண்டார். விவசாயத்துறையில் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என ஒருவர் கூற 'ரோபோக்கள், களை எடுப்பதற்கு பதிலாக நெல்நாற்றை பிடுங்கி விட்டால் என்ன செய்வது' என்று சிரித்தபடி கேட்டார்.








      Dinamalar
      Follow us