/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்களுக்குள் தேங்கிய தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்
/
பயிர்களுக்குள் தேங்கிய தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்
பயிர்களுக்குள் தேங்கிய தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்
பயிர்களுக்குள் தேங்கிய தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்
ADDED : செப் 20, 2024 05:38 AM

மேலுார் : கீழையூரில் கால்வாய் உடைப்பை சரி செய்யாததால் தண்ணீர கண்மாய்க்கு செல்லாமல் வயல்களுக்குள் தேங்கி பயிர்கள் அழுகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலுார் ஒரு போக பாசனத்திற்கு கள்ளந்திரி- குறிச்சிபட்டி வரை 12 வது பெரியாறு பிரதான கால்வாய் செல்கிறது.
இக் கால்வாயில் கீழையூரில் 26 மடை வழியாக செல்லும் தண்ணீர் 2 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான தென்மா கண்மாய்க்கு செல்லும். இக் கண்மாய் நிரம்பினால் 360 ஏக்கர் பாசனம் பெறும். ஆனால் நீர்வளத்துறையினர் பராமரிக்காததால் மடை மற்றும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
விவசாயி ஆறுமுகம்: 26 வது மடை வழியாக வெளியேறும் தண்ணீர் செல்வதற்கு உடைகல்லால் கட்டப்பட்ட கால்வாய் உடைந்ததால் கரும்பு, வாழை மற்றும் நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் 5 நாட்களாக தேங்கி கிடப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், வாழைக்கு ரூ.30 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் செய்வதறியாது திகைக்கிறோம்.
தண்ணீர் தென்மா கண்மாயை சென்றடையாததால் 360 ஏக்கர் தரிசாக கிடக்கிறது. உடைப்பை சரி செய்யக்கோரி 7 ஆண்டுகளாக நீர்வளத்துறையினரிடம் மனு கொடுத்தும் சரி செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். அதனால் பயிர்களை பாதுகாக்க கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கால்வாய் உடைப்பு சரி செய்யப்படும் என்றார்.