/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் கொட்ட இடமின்றி விவசாயிகள் தவிப்பு
/
நெல் கொட்ட இடமின்றி விவசாயிகள் தவிப்பு
ADDED : மார் 19, 2025 04:35 AM

மதுரை மதுரை கிழக்கு களிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொட்ட இடமில்லாமல் அறுவடை பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
களிமங்கலம் விவசாயி முகமது இஷா கூறியதாவது: மதுரை கிழக்கில் களிமங்கலம், ஓவலுார், களிமங்கலம் ஓடைப்பட்டி, மீனாட்சிபுரம் புதுார், அன்னஞ்சியூர் பகுதிகளில் 800 ஏக்கரில் நெல் விவசாயம் ஏற்படுகிறது. இங்குள்ள அரசு கொள்முதல் மையத்தில் 700 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை முடிந்து எடையிடப்பட்டு கொட்டப்பட்டுள்ளது. அவற்றை லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மைய வளாகம் முழுவதும் நெல் மூடைகளும் காயவைக்கப்பட்ட நெல்லும் குவிந்து கிடப்பதால் மற்ற விவசாயிகளின் நெல் மூடைகளை கொண்டு வரமுடியவில்லை. லாரிகளும் உள்ளே வரமுடியவில்லை. இப்பகுதியில் இன்னமும் 80 ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இடமில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளனர். குவிந்து கிடக்கும் மூடைகளை தாமதமின்றி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சேர்த்தால் தான் எங்களது நெல்லை அறுவடை செய்ய முடியும் என்றார்.