/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் எதிர்பார்ப்பில் விவசாயிகள்
/
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் எதிர்பார்ப்பில் விவசாயிகள்
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் எதிர்பார்ப்பில் விவசாயிகள்
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் எதிர்பார்ப்பில் விவசாயிகள்
ADDED : நவ 10, 2024 04:04 AM
திருப்பரங்குன்றம். : திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் தென்கால், பானாங்குளம், சேமட்டான்குளம், குறுக்கட்டான், மேல நெடுங்குளம், விளாச்சேரி, செவ்வந்திக்குளம், பெருங்குடி, நிலையூர் பெரிய கண்மாய்களுக்கு வரும். இக்கண்மாய்களின் தண்ணீர் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சமீபத்தில் பெய்துவரும் மழையால் தென்கால், நிலையூர் பெரிய கண்மாய்களுக்கு 30 சதவீதம், சிறிய கண்மாய்களுக்கு 50 சதவீத மழைநீர் மட்டுமே வந்துள்ளது.
மானாவாரி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டும் நெல்நாற்று நட்டுள்ளனர். விரைவில் திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கும் வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயப் பணிகள் துவங்குவதுடன் விவசாயிகளின் வாழ்க்கை செழிப்படையும் என்ற நம்பிக்கையுடன் குன்றத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.