/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பருத்தி இறக்குமதி வரிவிலக்குக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தல்
/
பருத்தி இறக்குமதி வரிவிலக்குக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தல்
பருத்தி இறக்குமதி வரிவிலக்குக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தல்
பருத்தி இறக்குமதி வரிவிலக்குக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 04:41 AM
மதுரை: 'பருத்தி இறக்குமதி வரிவிலக்குக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கக்கூடாது' என, பாரதிய கிசான் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்தாண்டு இந்தியா 30 மில்லியன் பேல்கள் உற்பத்தி செய்யும் என்றும், நம் உள்நாட்டுத் தேவை 31.5 மில்லியன் பேல்களாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இறக்குமதி கொள்கை காரணமாக சந்தையில் பருத்தியின் விலை ஒரு குவின்டாலுக்கு ரூ.1400 குறைந்துள்ளது என்கின்றனர் பாரதிய கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அமெரிக்கா விதித்த 50 சதவீதம் வரியால் இந்திய ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நிவாரணமாக அதாவது மானியமாக மத்திய அரசு உதவிகளை வழங்க வேண்டும். அதற்கு பதில்
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீது விதிக்கப்பட்டிருந்த 11 சதவீதம் வரியை நீக்கியுள்ளது மத்திய அரசு. இதனால் குவின்டால் ரூ. 7500க்கு விற்ற பருத்தி விலை ரூ. 6000 ஆக குறைந்து விட்டது.
அக்டோபரில் இந்தியாவில் பருத்தி அறுவடைக்கு வரும் என்பதால் செப்., 31 வரை மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும் என சமாதானம் தெரிவித்த மத்திய அரசு, தற்போது டிச., 31 வரை வரிச்சலுகையை நீட்டித்துள்ளது.
இந்திய பருத்தி அக்டோபர் முதல் சந்தைக்கு வரும். வரிச்சலுகையை நீட்டித்தால் ஒரு குவின்டாலுக்கு ரூ.2500 வரை இந்திய விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
தொழில் துறை, வேளாண்மை துறையை சமமாக நினைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தொழில்துறைக்கு ஆபத்து என்றால் வேளாண் துறையையும், விவசாயிகளையும் பலி கொடுக்கின்றன.
ஆதார விலை வேண்டும் இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 3 கோடி பேல்கள் பருத்தி விளையும் நிலையில், மத்திய அரசு ஒரு கோடி பேல்களை மட்டுமே கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டத்தின் கீழ் அனைத்து பருத்தியையும் கொள்முதல் செய்ய வேண்டும். டிச., 31 வரை பூஜ்ஜிய இறக்குமதி வரியுடன் பருத்தி இறக்குமதி நீட்டிக்கப்பட்டால் உள்நாட்டில் பருத்தி விலை மேலும் குறையும். விலை கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு செல்வர். பருத்தித்துறையில் இந்தியா தன்னிறைவில் இருந்து இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலைக்கு மாறும் என்றனர்.

