/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
/
குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
ADDED : டிச 10, 2025 05:52 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணைத் தாசில்தார் தாணுமாலயன் தலைமையில் துவங்கியது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகள், விவசாய சங்கத் தலைவர் பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். குறைதீர் கூட்டத்தை தாசில்தார் புறக்கணிப்பதாகவும், பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்பதில்லை, உசிலம்பட்டி சந்தையில் துாய்மை பணிநடக்காமல் குப்பை பரவியுள்ளது.
குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்களுக்கும் தீர்வு இல்லை என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்தும் தாலுகா அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.

