/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆட்டுச்சந்தையில் கூடுதல் கட்டணம் விவசாயிகள் புகார்
/
ஆட்டுச்சந்தையில் கூடுதல் கட்டணம் விவசாயிகள் புகார்
ஆட்டுச்சந்தையில் கூடுதல் கட்டணம் விவசாயிகள் புகார்
ஆட்டுச்சந்தையில் கூடுதல் கட்டணம் விவசாயிகள் புகார்
ADDED : ஏப் 02, 2025 03:23 AM
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி ஆட்டுச் சந்தையில், ஆடுகள் விற்பனைக்கு திடீரென கட்டணத்தை உயர்த்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிக்குச் சொந்தமான ஆட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதை ஏலம் எடுத்து ஒப்பந்ததாரர்கள் நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் ஆடுவளர்க்கும் விவசாயிகள், அவற்றை விற்கவும், வாங்கவும் பயன்படுத்தி வருகின்றனர். பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் 5000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
ஆடுகளை விற்பனை செய்ய ஒரு ஆட்டுக்கு ரூ. 50 கட்டணமாக ஒப்பந்ததாரர்கள் வசூலித்து வந்தனர். ஆனால் திடீரென கட்டணத்தை உயர்த்தி நேற்று ரூ. 100 வசூலிக்கப்பட்டது. இதனால் ஆடு விவசாயிகள் ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஒப்பந்ததாரர்கள் விவசாயிகளிடம் கட்டாய வசூலாக ரூ.100 வசூலித்தனர்.
ஆடு விவசாயிகள் கூறியதாவது: கடந்த வாரம் வரை ஒரு ஆட்டுக்கு ரூ.50 வசூலித்தவர்கள், இந்த வாரம் ரூ.100 எனக்கூறி கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்றனர்.
செயல் அலுவலர் மணிகண்டனிடம் கேட்டபோது, 'நிர்ணயித்தபடி முறையான கட்டணத்தை வசூலிக்கும்படி ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தி உள்ளேன்' என்றார்.