/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்கரை பாசனத்திற்கு போதிய தண்ணீரில்லை விவசாயிகள் குமுறல்
/
தென்கரை பாசனத்திற்கு போதிய தண்ணீரில்லை விவசாயிகள் குமுறல்
தென்கரை பாசனத்திற்கு போதிய தண்ணீரில்லை விவசாயிகள் குமுறல்
தென்கரை பாசனத்திற்கு போதிய தண்ணீரில்லை விவசாயிகள் குமுறல்
ADDED : ஜூலை 20, 2025 04:50 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது: 526 ஏக்கர் பரப்பு கொண்ட தென்கரை கண்மாயை நம்பி 1043 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இங்கு முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாரான நிலையில் கண்மாய் துார்வாரப்படாமல், நீர்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து விவசாயமும் செய்தும் வருகின்றனர்.
பாசனத்திற்கு தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் போதுமான அளவு கண்மாய்க்கு வரவில்லை. அதேசமயம் சோழவந்தான் வடகரை கண்மாய் நிரம்பியுள்ளது. தென்கரை கண்மாய்க்கு வரத்து குறைவாக உள்ளதால் சாகுபடி பணிகளை தொடங்க தாமதமாகிறது. அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர் என்றார்.
நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: தென்கரைக் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் மடையில் இருந்து கண்மாய்க்கு இடைப்பட்ட பகுதியில் 2350 ஏக்கர் பாசன நிலங்கள், 450 ஏக்கரில் மன்னாடிமங்கலம் கண்மாய் உள்ளது.
21 மடைகள் மூலம் நீர் திறந்து விடப்படுகிறது. இதை கடந்துதான் தென்கரை கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வேண்டும். 3 மாதங்களாக இப்பகுதியில் மழையில்லை. இதற்கிடையே தண்ணீர் போதியளவு திறக்கப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.