/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாறு நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் புகார்
/
நுாறு நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் புகார்
நுாறு நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் புகார்
நுாறு நாள் வேலைதிட்டத்தில் முறைகேடு: விவசாயிகள் புகார்
ADDED : ஆக 14, 2025 03:06 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம் நேற்றுமுன்தினம் நடக்கவிருந்த நிலையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்காக ரத்து செய்யப்பட்டது. நேற்று அக்கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்தது.
திருமங்கலம் ஒன்றிய கண்மாய்களில் சீமை கருவேல மரங்களை அழித்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் வழங்க வேண்டும். காங்கேயநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள அக்கிராம சுடுகாட்டின் கூரையை சீரமைக்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறையினர் விதைகளை முறையாக ஆய்வு செய்து தருவது இல்லை. திருமங்கலம் பகுதி கடைகளில் இதுவரை எந்த அதிகாரியும் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் கூறினர்.