/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச காய்கறி நாற்றுக்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
இலவச காய்கறி நாற்றுக்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 15, 2025 03:12 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மானாவாரி பகுதிகளில் ஆடி, ஆவணி, புரட்டாசியில் விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவர். அவர்களுக்கு ஆடி மாதம் காய்கறி விதைகளும், ஆவணி, புரட்டாசி மாதம் கத்தரி, மிளகாய், தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
3 ஆண்டுகளாக வழங்கப்படாததால் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. வெளியில் விலைக்கு நாற்றுக்கள் வாங்க தேனி, ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டும். ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் செலவாகும். தவிர போக்குவரத்து செலவு ரூ. 2000 ஆகும். இதனால் விவசாயிகள் பலர் பயிரிடவில்லை. காய்கறி விவசாயிகளுக்கு வருமானமும் இல்லை. இந்த ஆண்டாவது அரசு காய்கறி விதைகளும் நாற்றுக்களும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.