ADDED : நவ 13, 2024 04:14 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
மண்டல துணைத் தாசில்தார் புவனேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சுபாஷினி முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ., ராஜா வரவேற்றார்.
கட்டக்குளம் பிரிவில் 15 ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலை பணியின் போது சேதப்படுத்தப்பட்ட பெரியாறு பாசன வாய்க்காலை மீண்டும் சீரமைக்க வேண்டும். கிராமங்களில் போக்குவரத்திற்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, வாடிப்பட்டி பகுதியில் மின்தடை, மின் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காலி மனைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டன. ஆர்.ஐ.,க்கள் கவுதமன், ராணி, கிரிஜா, மாலா உட்பட பலர் பங்கேற்றனர்.

