ADDED : செப் 12, 2025 05:03 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் பாண்டி, தாமரைச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ., ராஜா வரவேற்றார்.
சாணம்பட்டி பகுதியில் கட்டட கழிவுகளை அகற்றுதல், எட்டிக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி நீர் ஆதாரத்தை காத்தல், பருவ மழை துவங்கும் முன் குட்லாடபட்டி, தாதம்பட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல், மேட்டுநீரேத்தான் சாலை அமைத்தல், சாத்தையாறு அணை ரோட்டை ஆக்கிரமித்துள்ள முள் மரங்களை ஒதுக்குதல், பெரியாறு பாசன கால்வாயில் ஒருபோகத்திற்கு தண்ணீர்திறக்கும் போது இருபோக சாகுபடி நிலங்களுக்கு முறை வைத்து தண்ணீர் முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாய சங்கத் தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.