/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
குன்றத்து கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 13, 2024 04:41 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தாசில்தார் கவிதா தலைமை வகித்தார்.
விவசாயிகள் மகாமுனி, பிச்சை, லட்சுமணன் பேசியதாவது: தென்கால் கண்மாய் கரையில் தார் ரோடு அமைக்கும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட இரண்டு மடைகளையும் சீரமைக்க வேண்டும். உள்புறத்தில் கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டும். கண்மாய் கரையில் அமைக்கப்படும் தார் ரோடு தரமின்றி பயன்பாட்டுக்கு வரும் முன்பே விரிசல் ஏற்பட்டு வருகிறது. செட்டிகுளம் ஊருணியிலுள்ள செடி கொடிகளையும், தேங்கி நிற்கும் கழிவுநீரையும் அகற்ற வேண்டும். கண்மாய்களுக்கு செல்லும் அனைத்து நீர்வழிப் பாதை, கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
குறைதீர் கூட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்பதில்லை. விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்றனர்.

