ADDED : மார் 09, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பகுதியில் விவசாயிகள் கோடை உழவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்பகுதியில் ஆடி பட்டத்தில் மானாவாரி நிலத்தில் பருத்தி, மக்காச்சோளம், சோளம், கம்பு உள்பட பயிர்களை சாகுபடி செய்து கடந்த மாதம் அறுவடை முடித்தனர். தற்போது நிலத்தை சுத்தப்படுத்தி உழவு செய்து வருகின்றனர். மழை பெய்ததால் எள் விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கோடையில் நிலத்தை உழுதால் அடுத்து பெய்யும் மழை நீர் முழுமையாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் நீர் வளம் இருக்கும். பூச்சி இனங்கள் பல்கி பெருகுவது தவிர்க்கப்படும். களைகள் கட்டுப்படுத்தப்படும். களைக்கொல்லி செலவு மீதமாகும் என்றனர்.

