/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீரில் நெற்பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள்
/
தண்ணீரில் நெற்பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள்
ADDED : அக் 27, 2025 03:22 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி சின்ன இலந்தைகுளம் பகுதியில் வைகை பெரியாறு பாசனம் மூலம் 200 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து வீணாகி உள்ளது.
சின்ன இலந்தைகுளம் முத்துவேல் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள பழமையான பாசன வாய்க்கால்கள் துார்ந்து போய்விட்டன. ஓடைகளும் துார் வாரப்படாமல் செடி, கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. அடுத்தடுத்துள்ள வயல்கள் வழியாகத்தான் மழை நீர் வடிந்து செல்கிறது.
வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரையிலான 'அவுட்டர் ரிங் ரோடு' பணிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. இந்த ரோடு பகுதியைக் கடக்க முடியாமல் மழை நீர் வயல்களில் தேங்குகிறது. தண்ணீர் வெளியேற சாலையின் நடுவே ஒரேயொரு இடத்தில் மட்டுமே வடிகால் உள்ளது. இதனால் மழைநீர் வெளியேறிச் செல்ல முடியவில்லை. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பெரும் நட்டம்தான் என்றார்.

