/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகள் கண்ணீர் : நெல் வயல்களை தாக்கும் பாக்டீரியா நோய்: மதுரை பகுதியில் 120 ஏக்கருக்கு மேல் பாதிப்பு
/
விவசாயிகள் கண்ணீர் : நெல் வயல்களை தாக்கும் பாக்டீரியா நோய்: மதுரை பகுதியில் 120 ஏக்கருக்கு மேல் பாதிப்பு
விவசாயிகள் கண்ணீர் : நெல் வயல்களை தாக்கும் பாக்டீரியா நோய்: மதுரை பகுதியில் 120 ஏக்கருக்கு மேல் பாதிப்பு
விவசாயிகள் கண்ணீர் : நெல் வயல்களை தாக்கும் பாக்டீரியா நோய்: மதுரை பகுதியில் 120 ஏக்கருக்கு மேல் பாதிப்பு
ADDED : டிச 03, 2024 05:56 AM

மதுரை கிழக்கு தாலுகாவில் மீனாட்சிபுரம், குருத்துார், வெள்ளியங்குன்றம் பொருசுபட்டி பகுதிகளிலும், மேலுார் தாலுகாவில் பூசாரிபட்டி, களிக்குளம், சதுர்மடங்கன் பகுதிகளிலும் 120 ஏக்கர் வரை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
அனுஷ் என்ற பிச்சை ராஜன், பூசாரிபட்டி: நரசிங்கம்பட்டி பூசாரிபட்டியிலும் மதுரை கிழக்கிலும்ஜெ.ஜி.எல்., ஏ.எஸ்.டி., 16, எம்.டி.டி., 1262 நெல் ரகங்களை 16 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். ஜெ.ஜி.எல்., நெல் ரகம் அறுவடை நிலையில் இருந்தாலும் ஏக்கருக்கு 2 மூடைகள் கூட கிடைக்காது.
ஜெ.ஜி.எல்., விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களிலும், விதை கம்பெனியில் ஏ.எஸ்.டி.,16 ரகத்தையும் எம்.டி.டி., 1262 ரகங்களையும் பயிரிட்டோம். நாற்று நட்ட 15 ம் நாளில் இருந்து பிரச்னைதான். மொத்தத்தில் பயிர் வளர்ந்தும் பதராகி ஏமாற்றி விட்டது.
விவசாய கல்லுாரி விஞ்ஞானிகளிடம் காண்பித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஒருவயலில் 90 நாள் பயிராகவும், மற்றொரு வயலில் 60 நாள் பயிராகவும் உள்ளது. அதுவும் தோகையில் பழுப்பு விழுந்து, குறுகி தரைமட்டத்திற்கு சென்று விட்டது.
திவாகர், மேட்டுப்பட்டி: 20 ஏக்கரில் ஜெ.ஜி.எல். 120 நாட்கள் நெல் ரகத்தை கயிறு மூலம் வரிசை நடவில் நாற்றுகளை நட்டுஉள்ளேன். ஆரம்பத்தில் நாற்று நட்ட போது பயிர் நன்றாக இருந்தது. நட்டு இப்போது 90 நாட்களாகிறது. கதிர் பிரிந்து வராமல் தோகை பழுப்பேறி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. களைக்கொல்லியை குறைத்து விட்டோம்.
சில வயல்களுக்கு உரம் தான் பிரச்னை என நினைத்து உரமிட வில்லை. ஆனால் எல்லா வயல்களிலும் இதே நிலை உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த பின் எதனால் பிரச்னை என கண்டறிந்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், தேத்தாம் பட்டி: குருத்துார், பொருசுபட்டி, மீனாட்சிபுரம் முதல், 2வது பிட்,மாங்குளம் 2வது பிட் உட்பட 40 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளேன். 12 ஏக்கரில் வளர்ந்துள்ள நெல்லுக்கு 125 நாட்கள் வயதாகியும் கதிர்கள் இல்லை. மொத்தமும் சேதமாகி விட்டது.
10 ஏக்கரில் வளரும் 145 நாள் பயிரில் 10 சதவீத நெல் கிடைக்கும். மீதி ஏக்கரில் 50 நாள் வயதில் பயிர்கள் வளர்கிறது. இதற்கு முன் இதுபோன்ற பிரச்னையை நாங்கள் சந்தித்ததில்லை.
இப்பிரச்னை குறித்து வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், விவசாய கல்லுாரி பயிர் நோயியல்துறை பேராசிரியர் மாரீஸ்வரி, பூச்சியியல் துறை இணைப்பேராசிரியர் சுரேஷ், உதவி இயக்குநர்பாலமுருகன் மதுரை கிழக்கு தாலுகாவில் நோய் பாதித்த வயல்களை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது:
வயல்களில் பாசி படிந்துள்ளது. வேர் அழுகி பாக்டீரியா இலைக்கருகல் நோய், உறை அழுகல் நோய், துங்ரோ வைரஸ் (இனப்பெருக்கத்தை குறைத்துவிடும்) நோய் காணப்படுகிறது. நாற்று நட்ட 30 முதல் 40 நாள் பயிர்களாக இருந்தால் ஏக்கருக்கு ஒன்றே கால் கிலோ அளவு காப்பர் சல்பேட் (மயில் துத்தம்), அதே அளவு மணல் கலந்து வயலில் துாவினால் பாசி அழிந்து விடும். பயிருக்கு காற்றோட்டம் கிடைக்கும். இலைக்கருகல்நோய்க்கு ஆரம்பத்திலேயே மருந்து தெளிக்க வேண்டும் என்றனர்.