/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
/
மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க தென் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 21, 2024 01:59 AM
ராமநாதபுரம்:தென் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசைவிவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் வேளாண் பல்கலை செயல்படுகிறது. வளர்ந்து வரும் வேளாண் வளர்ச்சிக்குஏற்பஇரண்டாவது வேளாண் பல்கலை அமைக்க வேணடும். அதுவும்தென் மாவட்டங்களை மையப்படுத்தி மதுரையில் அமைக்கவேண்டும்.
இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலுார், தஞ்சை மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் கூறுகையில், தென் மாவட்டங்களில் நெல், கரும்பு, சிறுதானியப் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், வாழை, காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகள், வீரிய ஒட்டு ரகம், விளைச்சல் அதிகப்படுத்தல், வேளாண் சார்ந்த தொழில் வளர்ச்சிக்கும் மதுரையில் வேளாண் பல்கலை அமைப்பது அவசியம்.அதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.

