ADDED : அக் 25, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., விடம் அயன் பாப்பாக்குடி கண்மாய் பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
'பொதுமக்கள், கண்மாய்க்குள் பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்துள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், அவற்றை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கண்மாயை பார்வையிட்ட ராஜன் செல்லப்பா, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.